ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தவர்களிடம் தாமத கட்டணம் வசூலித்த பிறகு தள்ளுபடி அறிவித்து என்ன பலன்?: ரீபண்ட் கிடைக்குமா? வர்த்தகர்கள் குமுறல்

புதுடெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் தாமதமாக செய்ததற்கு, ஏராளமான வர்த்தகர்கள், நிறுவனங்கள் ஏற்கெனவே அதிக அபராதம் செலுத்த விட்டன. இவ்வளவையும் வசூலி–்த்துவிட்டு, தள்ளுபடி என அறிவிப்பில் என்ன நியாயம் என வர்த்தகர்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, செலுத்தப்பட்ட அபராதம் திரும்ப கிடைக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம், கடந்த 12ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி நிலுவை இல்லாதவர்கள், கடந்த 2017 ஜூலை முதல் கடந்த ஜனவரி வரை சமர்ப்பித்திருக்க வேண்டிய ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை தாமதமாக தாக்கல் செய்தாலும் அபராதம் விதிக்கப்படாது. வரி நிலுவை உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தாலும், அவர்களுக்கு அதிகபட்ச வரி மாதத்துக்கு ₹500க்கு மேல் விதிக்கப்படாது’’ என அறிவித்தார். அதற்கு முந்தைய காலத்துக்கு உரிய ஜிஎஸ்டி தாமத கட்டணம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது’’ என்றார்.

 ஏற்கெனவே அபராதத்துடன் தாமதமாக செலுத்திய பலர், இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல வணிகர்கள் 3 பி படிவத்தை தாமதமாக தாக்கல் செய்ததற்கு அதிக அபராதம் செலுத்தியுள்ளனர். சிலர் சூழ்நிலை காரணமாக தாக்கல் செய்யவில்லை. சிலர், வேண்டுமென்றே தாமதம் செய்துள்ளனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில்தான் இந்த அறிவிப்பு உள்ளது. அப்படியானால், ஏற்கெனவே தாமதத்துக்கு அபராதம் செலுத்தியவர்கள் கதி என்ன? செலுத்திய அபராதத்தை மத்திய அரசு திரும்ப வழங்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், இந்த அறிவிப்பில் எந்த நியாயமும் இல்லை என குமுறலுடன் தெரிவித்தனர்.

Related Stories: