கொரோனாவில் இருந்து மீண்ட ராஜிவ்காந்தி மருத்துவமனை செவிலியர் திடீர் உயிரிழப்பு

பெரம்பூர்: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 58 வயது செவிலியர், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அங்கு, குணமடைந்து வீடு திரும்பிய அவர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், இவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால்  உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு செவிலியர் இறந்துள்ள சம்பவம் சக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: