வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், அவர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைந்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் எம்.எஸ்.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் நலம் கருதாது, பிறநர் நலம் காக்கும் ஓட்டுனர்கள் இந்த கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாத காலமாக வாகனங்கள் ஓடவில்லை. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில், அனைத்து வாகனங்களுக்கு உரிய காலாண்டு வரியை ரத்து செய்யாமல் செலுத்த சொல்வது வருந்தத்தக்கது.

லாரி, மினி பஸ், டூரிஸ்ட் கார், லோடு வேன்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஆகிய அனைத்து வாகனங்களுக்கும் உரிய காலாண்டு வரியை ரத்து செய்து மற்றும் நிவாரண தொகையாக குறைந்தது ரூ.5000 வீதம் தமிழக அரசு வழங்க வேண்டும், என அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் சார்பாக மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: