அமெரிக்காவில் இருந்து 164 இந்தியர்கள் வருகை: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை: அமெரிக்காவில் சிக்கித் தவித்த 164 இந்தியர்கள் ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸ் பீதி ஊரடங்கால் விமான சேவைகள் ரத்தானதால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் கடந்த 3 மாதங்களாக  தவித்தனர். இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 164 இந்தியர்களுடன் நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு  சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

சென்னை விமான நிலையத்தில் அவர்கள் அனைவரையும் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு இவர்களை சமூக இடைவெளியில் வரிசைப்படுத்தி மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தினர். பின்பு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த, கட்டணம் செலுத்தி தங்கும் இடங்களான சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கு தனி பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தும் காலம் முடிந்தபின்பு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Related Stories: