கொரோனா தடுப்பு பணி; டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பலராம் பார்கவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகின்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதை தடுப்பதற்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகின்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் முதல் அமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முதலமைச்சருடன் ஆலோசனை இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதே போல மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி மாநில முதல்வர் மற்றும் ஆளுனருடன் வரும் நாட்களில் ஆலோசனை நடத்த இருக்கின்றார். இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும்  என்பது போன்ற பல முக்கிய முடிவுகளை நாம் அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: