சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அகில இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: 3 மற்றும் 5ம் ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைனில் எழுத அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் சிறிமந்தோசென் வெளியிட்ட அறிக்கை: கடந்த மே 24ம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.

அதன் அடிப்படையில் 3 மற்றும் 5ம் ஆண்டு படிக்கும் சட்ட கல்லூரி மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைனில் எழுத வேண்டும். அதேநேரத்தில் இந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அந்தந்த கல்லூரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய ஆண்டில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன்டர்னல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வு முடித்த ஒரு மாதத்திற்குள் கல்லூரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.

Related Stories: