தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது; விஜயகாந்த் ட்விட்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது என விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால் தேமுதிக வரவேற்றிருக்கும், அரசின் முடிவால் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளது.மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு,காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: