சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை காலில் காயத்துடன் தப்பி ஓட்டம்: வனத்துறையினர் தேடுதல் வேட்டை

கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகராட்சிக்கு உட்பட்ட மூலங்காவு பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை தப்பி ஓடியது. அதனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மூலங்காவு பகுதியை ஒட்டிய ஓடப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த சுருக்கு கம்பியில் நேற்று முன்தினம் அதிகாலையில் மூன்று முதல் நான்கு வயதுள்ள சிறுத்தை ஒன்று சிக்கியது. சுருக்கு கம்பியில் சிறுத்தையின் கால் சிக்கிய நிலையில் அதிலிருந்து தப்பிக்க சிறுத்தை முயற்சி செய்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதியில் வந்து சிறுத்தையை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டபோது சிறுத்தை கம்பியில்  இருந்து தப்பி  ஓடியது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை தேடி வருகின்றனர். சுருக்கு கம்பியில் சிக்கியதில் காலில் காயம் ஏற்பட்டு இருந்தால் சிறுத்தையால் வெகுதூரம் செல்ல முடியாமல் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்றும், எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: