சமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்பனை செய்த 5 வாகனங்கள் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் அருகே சின்மையா நகர், நெற்குன்றம், காளியம்மாள் கோயில் தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சரக்கு ஆட்டோக்களில் சமூக இடைவேளி இல்லாமல் கூட்ட நெரிசலுடன் காய்கறி விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில், மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது, சரக்கு ஆட்டோக்களில் சமூக இடைவேளி இல்லாமல் காய்கறி விற்பனை செய்வது தெரிந்தது.

இதுதொடர்பாக, 5 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கொரோனா வைரஸ் பரவும் நோக்கில் செயல்பட்ட மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஒரு வாகனத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 5 வானங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் வசூலிக்கப்பட்டது.   

Related Stories: