செங்கல்பட்டு நகரில் முதல் நபராக கொரோனா தொற்றுக்கு கருவேப்பிலை வியாபாரி பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் முதல் நபராக, கொரோனாவுக்கு கருவேப்பிலை வியாபாரி பலியானார். செங்கல்பட்டு காந்தி சாலை மேட்டு தெருவை சேர்ந்த கருவேப்பிலை வியாபாரிக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு, செங்கல்பட்டு நகரில் கருவேப்பிலை முதல் நபராக இறந்ததால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் இறந்துள்ளனர். 671 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: