இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

சென்னை: முத்தமிழறிஞரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 97வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) தமிழகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 3ம் தேதி(இன்று) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-வட்ட-பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். திமுக தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணி திரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து,  தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன், திமுக எம்.பி. கனிமொழி, திமுக மூத்த தலைவர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மேலும், கலைஞர் நினைவிடத்தில் வைத்து திமுக தொண்டர் அசோக் குமார், மகாலட்சுமி-க்கு திருமணத்தை நடத்தி வைத்து, புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: