கட்டுக்கடங்காமல் உயரும் கொரோனா பாதிப்பு : ராயபுரத்தில் மட்டும் 3000-ஐ எட்டுகிறது; திரு.வி.க.நகர் உட்பட 4 மண்டலங்களில் 2000ஐ நெருங்கியது!!

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில், 128 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,867 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,651 பேருக்கும், தேனாம்பேட்டை -1867 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 2,935

கோடம்பாக்கம் – 1,867

திரு.வி.க நகரில் – 1,651,

அண்ணா நகர் – 1,341,

தேனாம்பேட்டை – 1,770,

தண்டையார் பேட்டை – 1,839,

வளசரவாக்கம் – 890,

அடையாறு – 883,

திருவொற்றியூர் – 534,

மாதவரம் – 378,

பெருங்குடி – 263,

சோளிங்கநல்லூர் – 262,

ஆலந்தூர் – 229,

அம்பத்தூர் – 587,

மணலி – 222 பேர்

சென்னையில் கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்தது எப்படி மற்றும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் முதல்வர் பழனிசாமி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: