அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆயிரம் கோயில்களில் திருப்பணி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆயிரம் கோயில்களில் ₹10 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை செயல்படுத்த ஒவ்வொரு இணை ஆணையரும் குறைந்தது 100 தகுதியான கோயில்களின் பட்டியலை  15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் திருப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகாரமில்லாத கோயில்கள் முன்னுரிமை அளித்து பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories: