பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை ; மது அருந்துதல், புகையிலை பயன்படுத்வும் தடை :தமிழக அரசு உத்தரவு

சென்னை : பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ், காசநோய், பன்றிக் காய்ச்சல், மூளை அழற்சி நோய் போன்ற தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. புகையிலை பயன்பாடு உலக அளவில் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே புகையிலை பொருட்கள் விற்பனைக்கும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கும் எச்சில் துப்புவதற்கும் தடை விதிப்பதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான இந்தியாவை அடைய முடியும்.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: