போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் இணையவழி மூலமாக நடந்தது. ஊரடங்கிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு அதனடிப்படையில் சென்ற மாதம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

மே மாத ஊதியம் வழங்கும் பொழுது சென்ற வருட சராசரி அடிப்படையில் வருகைப் பதிவேடு வழங்குவது மீதி நாட்களை சொந்த விடுப்பில் கழிப்பது விடுப்பு இல்லாவிட்டால் சம்பளம் இல்லா விடுப்பாக பாவித்து சம்பளத்தை கொடுக்காமல் இருப்பது என்ற அடிப்படையில் போக்குவரத்து நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவு செய்து அதன் அடிப்படையில் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதை கண்டித்தும், முழுமையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் பணிமனைகளில் நேற்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் பல பணிமனைகளின் நுழைவாயில்களை மூடி விட்டனர். இதனால் ஊழியர்கள் வெளியில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: