மின்னல் தாக்கியதில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ

மேட்டூர்:  சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது இரண்டாவது பிரிவில் நிலக்கரி கையாளும் பகுதியில், திடீரென மின்னல் தாக்கி தீப்பற்றியது. தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: