×

தொழிற்சாலைகளுக்கு அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 4,367 பேர், சிறப்பு ரயிலில், வெளி மாநிலங்களான பீகார், ஒடிசா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று (நேற்று) புதன்கிழமை 15 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 656 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். பணிக்கு வரும்போது அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தொழிற்சாலைக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : factories , factories
× RELATED தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால்...