கொரோனாவுக்கு அக்குபஞ்சர் முறை ஐகோர்ட்டில் மனு

சென்னை: கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் முறை மூலமாக சிகிச்சை அளிப்பது குறித்து 4 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா  வைரஸ் தொற்றுக்கு ஆங்கில மருத்துவ முறையில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அக்குபஞ்சர் முறை மூலமாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்.  

மாத்திரைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை செய்யும் 1 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். அதனால், அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் 3 வாரங்களில் மத்திய அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சுகாதாரத்துறை 4 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories: