தென் கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது: சுகாதாரத் துறை தகவல்

சென்னை :  கொ ரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக  1.50  லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் ெதரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை  பல்வேறு நிறுவனத்திடம்  வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக  தென்கொரிய நிறுவனத்திடமிருந்து  1 லட்சம் பிசிஆர் கிட்கள் கடந்த வாரம் தமிழகம் வந்தடைந்தது.

இதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை  வந்து சேர்ந்தது. இந்தக் கருவிகள் நேற்று  தமிழகம் வந்தடைந்தது. வரும் வாரங்களில் வாரத்திற்கு ஒரு முறை 1 லட்சம் பிசிஆர் கிட் வீதம் மீதமுள்ள 7.50 லட்சம் பிசிஆர் கிட்கள் தமிழகம் வரும். இனிவரும் காலங்களில்  41 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 27 தனியார்  பரிசோதனை மையங்கள் என  68 பரிசோதனை மையங்களிலும் பரிசோதனை செய்யும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: