ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கொரோனாவால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (87) ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து 23ம் தேதி சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு ெகாரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தொடர்புகொள்ள அழைத்தபோது அவருடைய உறவினர்கள் செல்போனை எடுத்து அவர் நேற்றுமுன்தினமே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கேட்டு அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: