தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 624 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 624 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 24 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து வந்த 6 பேருக்கும், டெல்லி, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், மேலும் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த 5 பேருக்கும், லண்டலின் இருந்து வந்த 7 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: