நடக்க முடியாத தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கி.மீ. அழைத்துச் சென்ற சிறுமியை பாராட்டிய இவாங்கா ட்ரம்ப்

நியூயார்க்: டெல்லி குருகிராமில் இருந்து பீகார் மாநிலம் வரை 1200 கி.மீ தொலைவுக்கு நடக்க முடியாத தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து ஓட்டிய 15 வயது சிறுமிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவாங்கா ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவு செய்துள்ளார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன் பாஸ்வானுக்கு 15 வயதில் மகள் உள்ளார். மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி மோகனுக்கு விபத்து ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார்.

குருகிராமில் தந்தையுடன் 15 வயது சிறுமி ஜோதி குமாரி தங்கியிருந்த நிலையில், ஊரடங்கிற்கு இடையே விபத்தில் காயமடைந்த தந்தையை பின்புறம் அமர வைத்து 7 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து பீகாரில் உள்ள தனது சொந்த ஊரான தர்பங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதற்கு 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவருடய அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள்பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” என இவாங்கா ட்ரம்ப் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>