அபராத தொகை கட்டுவதை ரத்துசெய்யக்கோரி மாவட்ட தலைநகரங்களில் இன்று கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினால் மார்ச் 24ம் தேதி மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான இருப்பிற்கும், கடைசியாக கட்டிய விற்பனை தொகைக்குமான வித்தியாச தொகையை மாவட்ட மேலாளர்கள் கட்ட வலியுறுத்தினர். இதை ரத்து செய்யக்கோரி சங்கத்தின் சார்பில் கடிதத்தை அளித்திருந்தோம். இதில், அபராதங்களை ரத்துச்செய்யக்கோரியும், வித்தியாச தொகையை செலுத்திய பிறகும் அதாவது டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களால் கட்ட வலியுறுத்தியதன் பேரில் 2 சதவீத அபராதம், 18 சதவீதம் ஜி.எஸ்.டியும் கட்டிய பிறகும் மீண்டும் கட்ட வலியுறுத்துவதை ஆட்சேபித்தும் மனு அளித்திருந்தோம்.

அபராதங்கள் செலுத்தப்பட்ட பிறகும் மீண்டும் தலைமை அலுவலகத்தின் சுற்றறிக்கையின் பேரில் விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகை பணியாளர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. . எனவே, அபராத தொகையை ரத்து செய்யக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 23ம் தேதி (இன்று) கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

Related Stories: