பெரியபாளையத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்ஐக்கு கொரோனா: காவல் நிலையத்திற்கு சீல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் மது விலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்திற்கு சீல்  வைக்கப்பட்டது. பெரியபாளையத்தில் மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் உள்ளது.  இந்த காவல் நிலையத்தில், ஒரு எஸ்ஐ, தலைமை காவலர் என மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் மது விலக்கு அமல் பிரிவு எஸ்ஐக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று  பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று காலை கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பெரியபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தை சுகாதார துறையினர்  பூட்டி சீல் வைத்தனர். பின்னர், ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளித்தனர்.  மேலும், அந்த எஸ்ஐ திருவள்ளூரை சேர்ந்தவர் என்பதால், அங்குள்ள அவரது வீட்டில் உள்ளவர்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தினர்.

Related Stories: