சென்னை ராயபுரம் மருத்துவமனையில் 47 கர்ப்பிணி பெண்கள், 6 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ராயபுரம் மருத்துவமனையில் 47 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 6 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அவசர சிகிச்சை பிரிவு வழியாக கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் முக்கவசம் அணியாமலும், தற்காப்பு உடை அணியாமலும் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த உடல் போஸ்ட் டெலிவரி வார்டுக்கு மாற்றப்பட்ட அவர், அந்த வார்டில் இருந்த 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுடன் பழகியுள்ளார். இதனிடையே 30-ம் தேதி காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் அந்த மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள் 47 பேர் மற்றும் செவிலியர்கள் 6 பேருக்கு கூறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணி புரியும் ஒரு பெண் மருத்துவர், 3 பயிற்சி மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களிலும் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: