மாமல்லபுரத்தில் 4வது நாளாக கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி பசு மாடு பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில்  தொடர்ந்து நேற்று 4வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது, கடற்கரையில் நின்றிருந்த ஒரு பசு மாடு ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக பலியானது.வங்க கடலில் கடந்த வாரம் உருவான புயலால், தமிழகத்தின் பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் நேற்று தொடர்ந்து 4வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மாமல்லபுரம், கொக்கிலமேடு, வட நெம்மேலி குப்பம், காட்டுக்குப்பம், பட்டிப்புலம் குப்பம், புதிய கல்பாக்கம், தேவனேரி, சூளேரிக்கா, எடையூர் ஆகிய பகுதிகளில்  உள்ள மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க  செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று ராட்சத அலை 15 அடிக்கும் மேல் கரையை நோக்கி சீறி பாய்ந்தது. அந்த நேரத்தில் கடற்கரையில் நின்றிருந்த ஒரு பசு மாடு, அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு, சடலமாக கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் உள்பட பல்வேறு மீனவ குப்பங்களில், 60 கிமீ வேகத்துக்கு பலத்த காற்று வீசியது. மேலும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: