சிறப்பு ரயில்கள் மூலம் உ.பி., மணிப்பூருக்கு 3,000 தொழிலாளர் புறப்பட்டனர்

சென்னை:  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு  மாநிலத்தில் இருந்தும் ஷர்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி, ஆந்திரா,  பீகார், ஓடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு  கடந்த 6ம் தேதி முதல் 20ம்தேதி வரையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 1,00,779 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றனர்.  சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

மாலை 4.30 மணிக்கு மணிப்பூர்  மாநிலத்துக்கு 1,600 பயணிகள் சென்றனர். இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்துக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் தலா ஆயிரத்துக்கும் மேறபட்டோர் என  3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து அவரவர் பகுதிக்கு புறப்பட்டனர்.

Related Stories: