கோவிட் -19 வழிகாட்டுதல் ஏ, பி, சி, டி என பிரித்து வெளியீடு: தமிழகத்தில் பிசிஆர் டெஸ்ட் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவிட்-19 தொடர்பான  விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

பரிசோதனைக்கான உத்திகள்:

* உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும்.

* கடந்த 14 நாட்களில் வெளிநாட்டிலிருந்தவர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.

* சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை.

* வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்.

பரிசோதனை காண வழிகாட்டும் முறை:

* தமிழகத்தில் பரிசோதனை முறைகள் ஏ, பி, சி, டி என  நான்கு வகையாக  மேற்கொள்ளப்படுகிறது

* முதல் வகை  (ஏ) : பிற மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும், அப்படி வெளி மாவட்டத்திற்கு பயணம் சென்றால் 14 நாட்கள் தனிமை கட்டாயம்.

* இரண்டாம் வகை (பி) : தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லக்கூடியவர்கள் அல்லது பிற மாநிலங்கள் இருந்து தமிழகத்திற்கு வரக் கூடியவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,  நோய் தொற்று இருந்தால் அருகில் இருக்கக்கூடிய நோய் தடுப்பு முகாம்களில் அனுமதிக்க வேண்டும்.

* அறிகுறி இருந்து அவர்களுக்கு பரிசோதனையில் நோய் பாதிப்பு இல்லை என்றால் அவர்களை முதல் 7 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் அதன் பிறகு மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாம் பரிசோதனை 7 நாட்களுக்கு பிறகு  அவர்களுக்கு நோய்த் தொற்று உருவானால் அவர்கள் கட்டுப்பாட்டு முகாம்களில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் .

*  மூன்றாம் வகை (சி) : வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று இருந்தால் மருத்துவமனைக்கும் இல்லாவிட்டால் கட்டுப்பாட்டு முகாம்களில் 14நாட்கள் இருக்க வேண்டும்.

* பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் அவர்களை முதல் 7 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும். பிறகு மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு பிறகு நடக்கும் 2ம் பரிசோதனையில் நோய்த் தொற்று உருவானால் அவர்களை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் .

* நான்காவது வகை (டி):  ஏற்கனவே உடல் உபாதை உடையவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரக்கூடியவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கும், 75 வயது உடையவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை பெற்று வீடு

திரும்புவோருக்கான விதிகள்:

* நோய் பாதிப்பு உடையவர் மிகக்குறைவான பாதிப்பில் இருந்தால் அவர் 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம். அவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.

* நோய் தொற்று பாதிப்பு சராசரி அளவில் இருந்தால் ஒருவரை 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம், அறிகுறி இல்லை என்றால் 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* நோய் தொற்று அதிகமாக இருக்கக்கூடிய நபர்கள்  அவர் 100 சதவீதம் குணமடைந்து அவர் பரிசோதனை முடிவில் நோய் தொற்று இல்லை என்பது முடிவு வரும் வரை அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும், அதன் பின்னர் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நோயாளிகளின்  உடல் நிலை குறித்து மாவட்ட  அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: