சென்னை : பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார்.நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் பெண்கள் பங்கேற்பது இல்லை என்றெல்லாம் விவாதங்கள் கிளம்பின.