ஆம்பன் புயல் குறித்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு: NDRF மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை...!

டெல்லி: வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக(ஆம்பன்) வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. நேற்று நள்ளிரவு அது அதி தீவிரப் புயலாக மாறியது. தற்போது உச்ச உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனால், தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் ஆம்பன் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே வரும் 20ம் தேதி நாளை மறுநாள் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், ஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். பருவநிலை மாற்றத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: