மதுபிரியர்களுக்கு மேலும் சலுகையா?: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை 2 மணி உயர்த்த திட்டம்...டோக்கன் 15000-ஆக உயர்வு

சேலம்: டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 7ம் தேதி சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் இரண்டே நாளில் ஐகோர்ட் தடையால் மூடப்பட்டது. தமிழக அரசு அப்பீல் செய்ததையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு  தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கடைகள் செயல்படுகிறது.

கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஏற்றார்போல் இந்த டோக்கன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிறு முதல் திங்கள் வரை வாரத்தின் 7 நாட்களில் கிழமை  வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன் மட்டுமே விநியோகம் என ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். நேர நீட்டிப்பு  குறிப்பு எப்போது வேண்டுமானாலும் உத்தரவு வருமென விறபனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், 1500 டோக்கனாக உயர்த்தவும்  முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

Related Stories: