கோவை, திருப்பத்தூரில் சூறைகாற்றுடன் மழை

சென்னை: கோவை, திருப்பத்தூர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால்  உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பு, சுந்தராபுரம், சிறுவாணி அடிவாரம், வெள்ளிங்கிரி மலை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 மரங்கள் சாய்ந்து விழுந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருப்பத்தூர் அடுத்த சின்ன கண்ணாலபட்டி கிராமத்தில் குடிசை வீடுகளில் இருந்த ஓலைகள் பறந்தது.  அந்த பகுதியில் இருந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரமும், அருகில் இருந்த 5 தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தது

Related Stories: