கொரோனாவை அளிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்; உயிர்காக்கும் கருவியான வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும்...அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: உங்கள் பிரதமர் என்னுடைய நல்ல நண்பராக இருந்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209  க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 308,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,624,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,757,128 பேர்  குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரேனாவால் இதுவரை 2,752 பேர் உயிரிழந்த நிலையில், 30,153  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் உலகளவில் சீனாவை முந்தி இந்தியா 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது, உங்கள் பிரதமர் என்னுடைய நல்ல நண்பராக இருந்துள்ளார். நாங்கள் இந்தியாவுடனும்  வேலை செய்கிறோம், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்திய மக்கள் தொகை உள்ளது. நட்பு நாடான இந்தியாவுக்கு உயிர்காக்கும் கருவியான வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும். கொரோனா பேரிடரில் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும்  உறுதுணையாக இருப்போம். கண்ணுக்கு தெரியாத எதிரியை அளிக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். தடுப்பூசி கண்டுபிடிப்பில் இணைந்து செயல்பட்டு, கொரோனாவை வீழ்த்துவோம் என்றும் டிரம்ப் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

Related Stories: