ஈரானில் தவிக்கும் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டு வர வேண்டும்

சென்னை: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வெளியிட்ட அறிக்கை: ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்று கோவிட் 19 காரணத்தால் ஈரானில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தமிழக மீனவர்கள் 750 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களை மீட்க, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மற்றும் பல்வேறு மீனவர் அமைப்புகள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி வந்தன. மத்திய அரசு தனி கப்பல் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் செலவையும் மீனவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. கடந்த பல மாதங்களாக மீன்பிடி தொழில் இல்லாமல் மீனவர் குடும்பங்கள் பரிதவித்து வரும் இந்த சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களை அரசு செலவில் அழைத்துவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: