சிகிச்சை அளிப்பது தொடர்பாக வழிமுறைகள் வெளியீடு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  இதன்படி பாதிக்கப்படுபவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறி இல்லாமல் பாதிப்பு உறுதி செய்ய வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். பாதிப்பும் இல்லை  என்றால் வீட்டு தனிமை அல்லது தனிமைப்படுத்துதல் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு தனியாக என்று ஒரு அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அறையினுள்ளே கழிப்பிட வசதி இருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து வீடு தனிமையில் இருக்க உகந்தது என்ற பின்புதான் வீட்டு தனிமைக்கு அனுமதி அளிக்கப்படும். இல்லையென்றால், தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நோய் உள்ள அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

Related Stories: