ஆந்திராவில் கோயில்கள் விரைவில் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு: ஒரு மணி நேரத்திற்கு 250 பேர் மட்டுமே அனுமதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில்கள் விரைவில் திறக்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில்  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிபந்தனைகளுடன் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி அளிக்கப்படுகிறது. நெறிமுறைகள் பின்வருமாறு

* கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எ.

* கோயில்களில் ஒரு மணி நேரத்திற்கு 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* கோயில்களில் திருநீறு மற்றும் தீர்த்தம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* தரிசனத்தின் போது 6 அடி சமூக இடைவெளியில் பக்தர்கள் இருக்க வேண்டும்.

* மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு .

* மக்கள் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்பிருக்கும் கோயில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

*  கோயில்களின் அனைத்து வாயில்களிலும் சோப் மற்றும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* கைகழுவ வசதியாக இருக்கும் குழாய்களின் இருமுனைகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும்.

* கோயில்களுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று கிருமிநாசினி( sodium hypochlorite) தெளித்துக்கொள்ள வேண்டும்.

* மேலும் கோயில்களுக்கு வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி பரிசோதனை செய்யப்படும், அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

*  கோயில்களுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களின் மெசேஜ் மூலம், தரிசனம் நேர டோக்கன்  பெற அனுப்புமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் தரிசனத்துக்கு வரும் பொழுது ஆதார் அடையாள அட்டையை கொண்டு கோயில் தரிசனம் நேர டோக்கன்  பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: