கொரோனாவால் 10 மண்டலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் என உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று  முன்தினம் வரை 5226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 999 பேர் குணமடைந்துள்ளனர்.   41 பேர் உயிரிழந்துள்ளனர்.  4202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 20 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக ராயபுரத்தில்  890 பேர், கோடம்பாக்கத்தில்  835 பேர் திருவிக நகரில் 662 பேர், தேனாம்பேட்டையில் 564 பேர், வளசரவாக்கத்தில் 450 பேர் , அண்ணாநகரில்   4480பேர் , தண்டையார்பேட்டையில் 402  பேர், அம்பத்தூரில் 254 பேர், அடையாரில் 290 பேர் திருவொற்றியூரில 120 பேர் மாதவரத்தில் 72,மணலியில் 66 பேர் பெருங்குடியில் 64 பேர், சோழிங்கநல்லூரில்  64 பேர், ஆலந்தூரில 610பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். வட சென்னையை தொடர்ந்து தென் சென்னையிலும் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதை தவிர்த்து சென்னையில் 61.45 சதவீதம் ஆண்கள், 38.52 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: