சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ்,, ரஜினிகாந்த் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகிறது.