66வது பிறந்தநாள் முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று 66வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 66வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் முதல்வர் எடப்பாடிக்கு தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல் நலத்துடன் நீண்டகாலம் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்தநாள் காணும், முதல்வர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பாஜ தலைவர் முருகன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடவில்லை. கொரோ னா வைரஸ் தாக்குதல் பிரச்னை இருப்பதால், பிறந்தநாளையொட்டி அவர் யாரையும் சந்திக்கவில்லை. தலைமை செயலகத்துக்கும் அவர் வரவில்லை. வீட்டிற்கும் யாரும் வந்து வாழ்த்து சொல்ல வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: