மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரயில் நிலையம் மூடல்

சென்னை: மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரெயில் நிலையம் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரயில் நிலையம் மூடப்பட்டது. மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரயில் நிலையம் மூடப்பட்டது.

இதையடுத்து சென்னையில் ரயில் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். மேலும் சென்னை காவல் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே  ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கோயம்பேட்டில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தார். எனவே தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூரில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பயிற்சியில் உள்ள 124 பெண்காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories: