மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு கொரோனா என சமூக வலைதளங்களில் வதந்தி: காவல்துறை கடும் எச்சரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற வந்த உள்ளூர் வியாபாரிகள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் உள்ளது என்று இதுவரை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா அறிகுறி குறித்த சளி மற்றும் இரத்த பரிசோதனை நடந்தாலும், பரிசோதனை மேற்கொள்ளும் நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்ற தகவலை தினமும் நடக்கும் ரத்த பரிசோதனை முடிவுகளை வைத்து மாவட்ட கலெக்டர் தான் அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தி அறிவிப்பார்.

இதனால், மாமல்லபுரம் பொதுமக்கள் யாரும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி பயம் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை மாமல்லபுரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, கொரோனா குறித்து தவறான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாமல்லபுரம் காவல்துறை எச்சரிக்கை செய்து உள்ளது.

Related Stories: