தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தயாரித்த தில் என்கிற படம் பெரிய வெற்றி பெற்றதால் தில்ராஜு என்றே அழைக்கப்படுகிறார். ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு மரணம் அடைந்தார். 49 வயதாகும் தில்ராஜு நேற்று முன்தினம் இரவு தனது குலதெய்வ கோவிலில் எளிய முறையில் 2வது திருமணம் செய்து கொண்டார். மணமகள் யார் என்கிற விபரத்தை அவர் வெளியிடவில்லை.