சிங்கம்புணரி பகுதியில் விலை போகாத பலாப்பழங்கள்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஒடுவன்பட்டி, முட்டாக்கட்டி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியம் வண்ணாயிருப்பு, புழுதிபட்டி, செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரையான காலங்களில் பலாப்பழம் விளைச்சல் இருக்கும். இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த கஜா புயலால் எஸ்.புதூர் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட பலாமரங்கள் சாய்ந்தன.

இந்த ஆண்டு பலாப்பழங்கள் அதிக விளைச்சல் இருந்தாலும் கொரானா பரவல் காரணமாக கடைகள் திறக்கப்படாததால் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் பலாப்பழங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. பெரிய பழங்கள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: