இந்திய சீன வீரர்கள் நேருக்கு நேர் மோதல் : சிக்கிம் எல்லையில் பதற்றம்..!

பெய்ஜிங் : வடக்கு சிக்கிமில் இந்தியா சீனா எல்லையில் நேற்று பல இந்திய மற்றும் சீன வீரர்கள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது என்று இரண்டு மூத்த அதிகாரிகள் பெயர் வெளியிட விரும்பாமல் தெரிவித்தனர்.இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களுக்கு இடையிலான மோதல்கள் நகு லா செக்டருக்கு அருகில் நடந்தது. இந்த மோதலில் பல வீரர்கள் காயமடைந்தனர் என கூறப்படுகிறது.

“150 இந்திய வீரர்கள் சம்பந்தப்பட்ட இந்த மோதலில் நான்கு இந்திய வீரர்கள் மற்றும் ஏழு சீன துருப்புக்கள் காயமடைந்தனர்.” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.எனினும் இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தலையிட்டு மோதல் நிறுத்தப்பட்டது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.நகு லா பகுதி அடிக்கடி மோதல் நடக்கக்கூடிய பகுதியில்லை என்று ஒரு முன்னாள் உயர் தளபதி கூறினார்.

இந்திய மற்றும் சீன வீரர்கள் எல்லையில் மோதிக்கொள்வது இது முதல் முறை அல்ல. ஆகஸ்ட் 2017’இல், இந்திய மற்றும் சீன வீரர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லைக்கு அருகில் உள்ள லடாக்கிலுள்ள பாங்காங் ஏரிக்கு அருகே பலத்த மோதலில் ஈடுபட்டனர்.

Related Stories: