முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மறைவு: பல்வேறு கட்சியினர் அஞ்சலி

தக்கலை: தக்கலை  கார்மல் தெருவில் வசித்து வந்தவர் கு.லாரன்ஸ் (74). வக்கீலான இவர் கடந்த 1991ல் பத்மனாபபுரம் சட்டப்பேரவை தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 1993 முதல்  1996 வரை வனத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக  இருந்து வந்தார்.அதன்பிறகு அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்த கு.லாரன்ஸ் கடந்த  2006ல் திமுகவில் இணைந்தார். திமுகவில் மாநில சிறுபான்மையினரணி  துணைச்செயலாளராக இருந்து வந்தார்.

உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாரன்ஸ்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அதன்பின்னர் கடந்த 1ம் தேதி தக்கலைக்கு வந்த அவர் வீட்டில் ஓய்வில் இருந்து  வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு  ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை     நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: