திருவிக நகர் மண்டலத்தில் விதிமீறி செயல்பட்ட 8 கடைகளுக்கு சீல்

பெரம்பூர்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருவிக நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு சரக சிறப்பு கூடுதல் காவல் துணை ஆணையர் தீப சத்தியா மற்றும் பெரவள்ளூர் உதவி கமிஷனர் சுரேந்தர், திருவிக நகர் மண்டல உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார், உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, அங்குள்ள சிவ இளங்கோ சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட், பேக்கரி, பழமுதிர்சோலை, மளிகை கடை ஆகிய 4 கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்வது தெரிந்தது. உடனடியாக, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதேபோல், ஓட்டேரி பகுதியில் உதவி கமிஷனர் ஜெய் சிங் மற்றும் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டாளம் பகுதியில் 3 மளிகை கடைகளும், கொசப்பேட்டை பகுதியில் ஒரு மளிகை கடையும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Related Stories: