6 மாதம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தீர்மானம்

சென்னை:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சில்லரை விற்பனையில் ஆன்லைன் இ-காமர்ஸ் வர்த்தகத்தை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறைப்படுத்த வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை  அனுமதிக்காமல் உள்நாட்டு பொருட்களையும் இயல்பு வணிக பல அடுக்கு வணிகத்தையும் பாதுகாத்து சில்லரை விற்பனை நுகர்வோர் சங்கிலியை உறுதிப்படுத்தவேண்டும். வணிக நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஈஎஸ்ஐ அமைப்பு இருப்பதை போல் முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், உணவகங்கள், சிறு குறு நிறுவனங்களுக்கு  வட்டியில்லா முதலீடுகள் நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி 12 மாத விலக்கு அளித்து முதலீட்டில் வரவைத்து ஓராண்டுக்கு பின் அரசுக்கு வட்டி இல்லாமல் தவணை முறையில் செலுத்த வழி செய்திட வேண்டும்.  ஓர் ஆண்டிற்கான சொத்து வரி வருமான வரி நிலையான மின்கட்டணம் தண்ணீர் வரி வரி குப்பை வரி, தொழில்வரி, தண்ணீர் கட்டணம், போன்றவற்றிக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும். முதலீட்டாளர்கள், கடை உரிமையாளர்களுக்கு 50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும். பேரிடர்கால முதலீட்டாளர், கடை உரிமையாளர் உயிர் இழப்புகளுக்கு குடும்ப நல நிதியாக ரூ.1 கோடி அறிவிக்க வேண்டும். சிறிய அடித்தட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் அமைப்புசரா, முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு வணிகர்கள், டீக்கடை சிகை அலங்கரிப்போர், சலவைத் தொழிலாளர்கள், டிஜிட்டல், மலர், பழக்கடை,பெட்டிக்கடை, மார்க்கெட்டிங்,

எலக்ட்ரிக் மெக்கானிக், ஆட்டோ ஓட்டுநர்கள் சேவைத் துறையில் உள்ளோர் சாலையோரக் கடை வைத்திருப்பதற்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகையாக குறைந்தது ஆறு மாத காலத்திற்கு வழங்கிட வேண்டும்.  அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை தடுத்திடவும் போக்குவரத்து செலவினங்களை குறைத்திடவும் இப்பேரிடர் காலத்தை முன்னிட்டு குறைந்தது ஆறு மாத காலம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணங்கள் வசூலிப்பதை நிறுத்தி வைத்திட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: