2 கிமீ தூரம் நின்று குடிமகன்களுக்கு ஏமாற்றம் 4 மணி நேரத்தில் சரக்குகள் காலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானங்கள் வாங்க, 2 கி.மீட்டர் தூரம் வரை கால்கடுக்க வாலிபர்கள் நின்ற நிலையில், மதியம் 2 மணிக்கே 4 மணி நேரத்தில் சரக்குகள் விற்று தீர்ந்தது. கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த மார்ச், 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலாகியது. அன்று முதல், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், மது பழக்கத்துக்கு அடிமையான ‘’குடிமகன்’’’’கள், பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். பதுக்கிய மது பாட்டில்களை, சிலர் மிக அதிக விலைக்கு விற்றனர். 120 ரூபாய் குவார்ட்டர் சரக்கு, ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. பொறுமையிழந்த ‘’குடிமகன்’’’’கள், பூட்டிய டாஸ்மாக் கடைகளை உடைத்து, ‘’சரக்கு’’’’ திருடிச் சென்ற சம்பவம் அதிகம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 126ல் 40 மதுக்கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதில் திருவள்ளூர் தாலுகாவில் கடம்பத்தூர், மப்பேடு ஆகிய 2 மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மாதக்கணக்கில் மது கிடைக்காமல் அலைமோதிய குடிமகன்கள் ஒட்டுமொத்தமாக நேற்று மது கடைகளுக்கு படையெடுத்தனர். கூட்டம் கட்டுக்கு அடங்காமல் போனதால், அவர்களை 2 கி.மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். மது பிரியர்களும் சரக்கு வாங்க வேண்டும் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். இந்நிலையில், மதியம் இரண்டு மணிக்கே சரக்குகள் விற்று தீர்ந்தன. இதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்றும் சரக்கு கிடைக்காததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்து, இன்று காலை வருமாறு அனுப்பி வைத்தனர்.

Related Stories: