உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மீது அவதூறு குற்றம்சாட்டிய வக்கீல் உள்பட 3 பேருக்கு சிறை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மீது அவதூறு குற்றம்சாட்டிய 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றும் இரு நீதிபதிகள் மீது கடந்த ஏப்ரல் 27ம் ேததி மகாராஷ்டிரா மற்றும் கோவா வக்கீல்கள் சங்கத் தலைவர் விஜய் குர்லே, இந்திய பார் அசோஷியேஷன் தலைவர் வக்கீல் நீலேஷ் ஓஷா, தேசிய மனித உரிமை தன்னார்வலர் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் கான் பதான் ஆகியோர் அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீபக்குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வு முன் கடந்த 4ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிபதிகள் மீது அவதூறு குற்றச்சாட்டு தெரிவித்த விஜய் குர்லே, நீலேஷ் ஓஷா, ரஷித் கான் பதான் ஆகியோருக்கு தலா 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், தீபக் குப்தா அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், உச்ச நீதிமன்ற பொது செயலாளர் முன் சரண் அடைந்த பின் அதாவது அடுத்த 16 வாரங்களுக்கு பிறகு இந்த தண்டனை செயல்படுத்தப்படும். அவர்கள் சரண் அடையாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: