மத்திய அரசு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் திறப்பு: அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை:  அமைச்சர் உதயகுமார் நேற்று மதுரையில் அமைச்சர் அளித்த பேட்டி: கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரித்து, இதற்கு ஏற்ப சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகளை சில கட்டுப்பாட்டுடன் திறக்கலாம். தமிழகத்தையொட்டியுள்ள கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு தமிழக எல்லையோர மக்கள் அதிக அளவில் செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் நாமும் திறப்பது தொடர்பாக தீர ஆராய்ந்து, ஆலோசித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி, கூட்டம் கூடக்கூடாது. ஒரு நபருக்கு மற்றொருவருக்கும் 6 அடி தூரம் இருக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படிதான் இந்த கடை திறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: